தேன் எடுக்கச்சென்ற குடும்பஸ்தர் விபத்தில் பலி-கதிரவெளியில் சம்பவம் (எஸ்.சபேசன்)

மட்டக்கப்பு கதிரவெளி பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாகரை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகராசா வீதி கதிரவெளி பிரதேசத்தைச் சேர்;ந்த இரு பிள்ளைகளின் தந்தையான (30) வயதுடைய பரமானந்தம் பாஸ்கரன் என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிலிருந்து தேன் வியாபாரத்திற்காக தேன் எடுப்பதற்காக சென்று கொண்டிருக்கும் போது தனது மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டினை இழந்து வீதி ஓரத்தில் நின்ற மரத்தில் மோதியதில் சம்ப இடத்தில் மரணமடைந்ததாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
வாழைச்சேனை நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற வாழைச்சேனை பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி வடிவேல்-ரமேஸ்சானந்தன் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனையின் பின்னர் பிரேதத்தை உறவினர்களிடம்
ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார். சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.