அக்கரைப்பற்று மாநகர சபையின் புதிய ஆணையாளராக ஏ.ரீ.எம்.றாபி.

(எம்.எல்.சரிப்டீன்)
அக்கரைப்பற்று மாநகர சபையின் புதிய ஆணையாளராக ஏ.ரீ.எம்.றாபி, மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி  முன்னிலையில்  (24) தனது கடமைகளை அக்கரைப்பற்று மாநகர சபையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வின் போது உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். அக்கரைப்பற்று மாநகர ஆணையாளராக பொறுப்பேற்றுள்ள  ஏ.ரீ.எம்.றாபி இதற்கு முதல் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளராக கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.