மதங்களின் பன்முகத் தன்மையை மதித்தல், அறிக்கையிடல் தொடர்பில் மட்டக்களப்பில் கருத்தரங்கு.

கரிதாஸ் எகெட் மற்றும் சர்வமத அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு “மதங்களின் பன்முகத் தன்மையை மதித்தல், அறிக்கையிடல்” என்ற தொனிப்பொருளிலாலான செயலமர்வு கரிதாஸ் எகெட் நிறுவன கேட்போர் கூடத்தில் நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் கிறிஸ்டி அவர்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம் இடம்பெற்றது.

இச் செயலமர்வில் கரிதாஸ் எகெட் நிறவனத்தின் பணிப்பாளர் அருட்தந்தை ஏ.ஜேசுதாஸன், மட்டக்களப்பு சர்வத அமைப்பின் தலைவர் சிவஸ்ரீ வி.கே.சிவபாலன் குருக்கள், சர்வமத அமைப்பின் பிரதிநிதி மௌலவி சாஜகான், கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் அருட்தந்தை ஏ.ஏ.நவரெட்ணம், தொடர்பாடல் மத்திய நிலைய பிராந்திய நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் பெனிஸ்னஸ் பேரின்பநாயகம், கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் ஏ.எல்.தேவதிரன், மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார், மட்டக்களப்பு முஸ்லீம் ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் டி.எல்.ஜபர்கான் உட்பட ஊடகவியலாளர் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கரிதாஸ் எகெட் நிறுவனம் மற்றும் சர்வமத அமைப்புகளின் செயற்பாடுகள் குறித்த கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதுடன், மதங்களின் பன்முகத்தன்மையை மதித்து அறிக்கையிடல் தொடர்பில் வளவாளர் அருட்தந்தை ஏ.ஏ.நவரெட்ணம் அவர்களாலும், முரண்பாடுகள் மற்றும் வன்முறைகளைக் கையாளுதல், அதனூடான அறிக்கையிடல் தொடர்பில் வளவாளர் பெனிஸ்னஸ் பேரின்பநாயகம் அவர்களாலும் கருத்துகள் பகிரப்பட்டதுடன், ஊடகவியலாளர்களின் கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.

செயலமர்வின் இறுதியில் பங்குபற்றிய ஊடகவியலாளர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.