திருமலையில் மோட்டார் சைக்கிள் சாரதியொருவருக்கு இளைஞர் குழுவொன்று தாக்குதல்

எப்.முபாரக்
திருகோணமலை மாவட்டத்தின் உப்புவெளி  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அனுராதபுரச் சந்திப் பகுதியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்று  மோதி விபத்துக்குள்ளான நிலையில்  மோட்டார் சைக்கிள்   சாரதிக்கு இளைஞர் குழுவொன்று தாக்கி காயப்படுத்தியுள்ளதாக தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் இன்று(21) மாலை இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காரின் சாரதிக்கு தெரிந்த வெள்ளைமணல் பகுதியிலிருந்து சென்ற குழுவொன்றினால் தாக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.