நான் இரண்டாவது முறையாக போட்டியிட மாட்டேன் என்று சிலர் கிளர்ந்தெழுந்துள்ளனர்

“நான் இரண்டாவது முறையாக போட்டியிட மாட்டேன் என்று சிலர் கிளர்ந்தெழுந்துள்ளனர். மக்கள் அதை முடிவு செய்வார்கள். முதலில், இந்த 60 மாதங்களுக்கான வேலையை நான் முடிக்க வேண்டும்,  என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ  தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற கிராமத்துடனான ஜனாதிபதி சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தார்.

மக்கள் என்னை 60 மாதங்களுக்கு நியமித்தனர், இப்போது 14 மாதங்கள் ஆகின்றன. இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. நான் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட மாட்டேன் என்று சிலர் கவலைப்பட்டனர். நான் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேனா இல்லையா என்பதை மக்கள் தான் தீர்மானிக்கிறார்கள். இந்த முறையும் அது மக்களால் தீர்மானிக்கப்பட்டது. எனவே இந்த 60 மாதங்களுக்குள் எனக்கு நிறைய வேலை இருக்கிறது. நான் முதலில் அதை செய்ய வேண்டும் என்றார்.