அர்ஜென்டினா சிவில் அமைப்புக்களும் இலங்கைக்கு எதிராக போர்க்கொடி.

உண்மை மற்றும் நீதிக்காக போராடிய நீண்ட வரலாற்றைக் கொண்ட அர்ஜென்டினா மற்றும் பிராந்தியத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புகள், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் (HRC) இலங்கை குறித்த தீர்மானத்தை நிறைவேற்ற அழைப்பு விடுத்துள்ளன.

சிவில் சமூக அமைப்புகளால் வெளியிடப்பட்டுள்ள கூட்டு அறிக்கையில் 1983 மற்றும் 2009 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இலங்கை ஒரு நீண்ட உள்நாட்டு யுத்தத்தை  எதிர்கொண்டது இது ஆயிரக்கணக்கானவர்கள் கட்டாய காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

“2015 ஆம் ஆண்டில் இலங்கை  ஒரு பொறிமுறையை நிறுவுவதற்கு உறுதியளித்தது. எவ்வாறாயினும், புதிய அரசாங்கம் இந்த உறுதிப்பாட்டை மாற்றியமைத்தது, செய்யப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட முன்னேற்றத்தில் பின்னடைவைக் கொண்டுள்ளது, மேலும் நாட்டில் மனித உரிமை நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.

“ஆயுத மோதல் முடிவடைந்து பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், பாதிக்கப்பட்டவர்கள் நீதியற்றவர்களாகவே இருக்கிறார்கள், எதிர்காலத்தில் இந்த கடுமையான மீறல்கள் மீண்டும் நடக்காது என்பதற்கு இலங்கை குடிமக்களுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

அமைப்புகள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் உட்பட நாட்டின் மனித உரிமை நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதும் ஆபத்தானது என பல்வேறு விடயங்கள் குறிப்பிட்ட அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.