மட்டக்களப்பில் பொலிசாரின் தடைகளைமீறி கவன ஈர்ப்புபோராட்டம்

ஆயிரக்கணக்கான மக்கள் சர்வதேசத்துக்கு அழுத்தம்

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி மட்டக்களப்பில் இன்று (19) ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது.
மட்டக்களப்பில் முன்னர் திட்டமிட்டிருந்த இடத்தில் பேரணி நடத்த நீதிமன்றம் தடைவிதித்திருந்த நிலையில்இ திடீர் ஏற்பாடாக இடம்மாற்றம் செய்யப்பட்டு போராட்டம் இடம்பெற்றது.

வந்தாறுமூலை மாவடிவேம்பு ஆலயத்திலிருந்து சித்தாண்டி சந்தி பிள்ளையார் ஆலயம் வரை போராட்டம் இடம்பெற்றது.
மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் போராட்டம் நடக்கவிருந்த நிலையில், அங்கு பெருந்தொகையான பொலிசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் ஏற்பாட்டாளர்கள் மிக நேர்த்தியான திட்டமிடலில் திடீரென சித்தாண்டி சந்திக்கு இடமாற்றப்பட்டு போராட்டம் இடம்பெற்றது. எனினும் அங்கும் வந்த பொலிசார் வழிமறித்து இடையூறு ஏற்படுத்தி போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை புகைப்படம் எடுத்து தடுக்க முயன்றனர். ஆனால் பொலிசாரின் தடைகளை தாண்டி போராட்டம் நடந்தது.

நீதிமன்ற தடையுத்தரவை வழங்க பொலிசார் முயன்ற போதும் அதை யாரும் பெற்றுக்கொள்ளவில்லை.அதை எவரும் கணக்கெடுக்கவில்லை.
இந்த பேரணியில்யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,முன்னாள் எம்.பிக்கள் பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் மா.நடராசா, முன்னாள் அரச அதிபர் மா.உதயகுமார், யாழ் வேலன் சுவாமி ,கத்தோலிக்க மதகுரு பாதர் ஜெயராஜ் ,பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரேழுச்சி இயக்க இணைப்பாளர் சீலன்,ஜனநாயக போராளிகள் கட்சியின் நகுலேஸ், தமிழ் தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் சுரேஷ், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் குணராசா, இலங்கை தமிழரசு கட்சி மட்டக்களப்பு உறுப்பினர்களான தேவமணி, கந்தையா கலைவாணி  ரஞ்சினிஉள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாமாங்கம் அம்பாறை பாண்டிருப்பு திரௌபதியம்மன் ஆலயம் ஆகிய இடங்களில் இடப்பெற்ற தொடர் உண்ணாவிரத போராட்டங்களும் இன்று நிறைவடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.