மாகாண சபை தேர்தல்களை  நடாத்த முடியாது.முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதாக உறுதியளித்த தற்போதைய அரசாங்கம், அதற்கு முன்னர் மாகாண சபை தேர்தல்களை  நடாத்த முடியாது என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கூறுகிறார். மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அரசாங்கத்தால் வெற்றிபெற முடியாது என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.

இந்தியாவின் நலனுக்காக நிறுவப்பட்ட மாகாண சபைகளை ஒழித்து உள்ளூராட்சி நிறுவனங்களை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

“மக்கள் அரசாங்கத்தின் மீது மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளனர். மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதை விட இன்று மக்களுக்கு உயிர்வாழும் பிரச்சினை அதிகம். இன்று பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் மக்கள்வாழ்க்கை நடாத்த  மிகவும் கஸ்ரமான நிலையில் உள்ளனர், ”என்றார்.