இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம முல்லைத்தீவுக்கு விஜயம்!

போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அவர்கள் இன்று(18) வியாழக்கிழமை பி.ப 3.00மணியளவில் முல்லைத்தீவு மாவட்டத்த்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
முல்லைத்தீவு மாவட்ட செயலக  போக்குவரத்து திணைக்கள அலுவலகத்திற்கு சென்ற இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் அங்குள்ள நிலைமைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட அரச பேருந்து சாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் அங்குள்ள தேவைப்பாடுகள் தொடர்பில் ஊழியர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.