தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய பரிபாலன சபையினரால் 20பாடசாலைகளுக்கு குத்துவிளக்கு வழங்கி வைப்பு

?

(படுவான் பாலகன் ) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட 20பாடசாலைக்கு குத்து விளக்கு வழங்கும் நிகழ்வு இன்று(17) புதன்கிழமை நாற்பதுவட்டை பாலர் பாடசாலையில் நடைபெற்றது.

தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய பரிபாலன சபையினால் குறித்த குத்து விளக்குகள் வழங்கி வைக்கப்பட்டன. குறித்த குத்துவிளக்குகள் ஒவ்வொன்றும் 20000ரூபாய் பெறுமதிக்கும் அதிகமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்போது, நாற்பதுவட்டை கிராமத்தில் உள்ள பாலர் வகுப்பு மாணவர்களுக்கு தொடர்ச்சியாக பாலர் கல்வியை வழங்கும் பொருட்டு, நாற்பதுவட்டை பாடசாலையின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான பொறுப்பினையேற்று, அதன் ஆரம்ப நிகழ்வும் இன்று இடம்பெற்றது.

குறித்த பாலர் பாடசாலையில் கற்கும் 30மாணவர்களுக்கான சீருடையும் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டமையுடன் கற்றல் உபகரணங்களும் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன. மேலும் பாடசாலையின் வளாகத்தில் பயன்தரும் மரக்கன்றுகளும் நடப்பட்டன.

ஆலய பரிபாலன சபையின் தலைவர் மு. அருணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சி. புஸ்பலிங்கம், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திருமதி தெட்ஷணகௌரி தினேஷ், மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி பணிப்பாளர் அகிலா கனகசூரியம், அமைப்புக்களின் பிரதிநிதிகள், அதிபர்கள் ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?