1200 ஏக்கர் காணியில் காடு வெட்டியமையினை தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்.

1200 ஏக்கர் காணியில் காடு வெட்டியமையினை தற்காலிகமாக நிறுத்த தீர்மானம் இன்றைய தினம் நிறைவேற்றப்பட்டது.

2021ம் ஆண்டுக்கான பிரதேச அபிவிருத்திக்குழு முதலாவது கூட்டம் இன்று (15) மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற போதே இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கௌரவ இராஜாங்க அமைச்சர் ச.வியாளேந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கச்சக்கொடி கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட கெவுளியாமடு கிராமத்தில் வனவள திணைக்களத்திற்கு சொந்தமான பகுதியில் கடந்த சில நாட்களாக சுமார் 1200 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை சிவில் பாதுகாப்பு படையினரால் காடுகள் வெட்டி துப்பரவு செய்கின்றமையினை தடுத்து நிறுத்த வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர்களான கோ.கருனாகரன், இ. சாணக்கியன் ஆகியோர் முன்வைத்த கருத்தினை ஏற்ற இராஜாங்க அமைச்சரும், பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான ச.வியாழேந்திரன் இந்நடைமுறை பற்றி ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்க தீர்மானம் நிறைவேற்றுவதாக அறிவித்தார்.

தொடர்ந்து இவ்விடயம் பற்றி அறியமுனைந்த போது வனவள திணைக்கள உத்தியோகத்தர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கவில்லை என்பது  தெரியவந்தது.