கொவிட் சடலங்களை அடக்கம் செய்யும் இடத்தை இராணுவத்தளபதி பார்வையிட்டார்.

கொவிட் 19 தொற்றினால் மரணித்த  சடலங்களை நல்லடக்கம் செய்யும் ஓட்டமாவடி சூடுபத்தினசேனை பிதேசத்திற்கு  பாராளுமன்ற உறுப்பினர் அல் ஹாபில் நஸீர் அஹமட்,  இராணுவ தளபதி சவேந்திர சில்வா  மற்றும்  இயக்குநர் மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் மற்றும்கோவிட் 19 நடவடிக்கைகளை அமைச்சக ஒருங்கிணைப்பாளர்     Dr. அன்வர் ஹம்தானி   மாகாண சுகாதாரப்பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் ஆகியோர்  நேற்று காலை (13.03.2021) ஓட்டமாவடி சூடுபத்தின சேனைக்கு சென்று பார்வையிட்டனர்.

இதேவேளைகோவிட் அடக்கம் தொடர்பான பிரச்சினை இப்போது தீர்க்கப்பட்டுள்ளது நாட்டின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த  45  கொவிட்சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது

 இன்னும் ஓரிரு சடலங்களே புதைபடாமல் உள்ளது. அவை  இன்று அல்லது நாளை அடக்கம் செய்யப்படும். சடலம் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒட்டமாவடியில் அடக்கம் செய்யப்படும் என்று ராணுவத் தளபதி   தெரிவித்தார்.