தந்தை செல்வா காலத்தில் எமக்கு தீர்வு கிடைத்திருந்தால் இன்றுசர்வதேசம் நோக்கி தமிழ்தேசிய அரசியல் பயணம்சென்றிருக்காது

பா.அரியநேத்திரன் மு.பா.உ

தந்தை செல்வா காலத்தில் எமக்கு தீர்வு கிடைத்திருந்தால் இன்றுசர்வதேசம் நோக்கி தமிழ்தேசிய அரசியல் பயணம்சென்றிருக்காது என இலங்கை தமிழரசு கட்சி ஊடக செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்இ,பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமானபா.அரியநேத்திரன் தெரிவித்தார்.                   மட்டக்களப்புமாமாங்கத்தில் இடம்பெறும் சுழற்சிமுறை உணவு தவிரப்புபோராட்டம் தொடர்பாக மேலும் கூறுகையில்,

1956 இல் கொண்டுவரப்பட்ட தனிச் சிங்களச் சட்டம், 1956, 1958, 1977, 1981 களில் கட்டவிழ்த்து விடப்பட்ட மிலேச்சத்தனமானதமிழினப் படுகொலைகள், 1972 இல் கொண்டு வரப்பட்டகல்வியில் தரப்படுத்தல் எனக் கட்டமைக்கப்பட்டதமிழினவழிப்பை சிங்கள பௌத்த அரச பயங்கரவாதம்தொடர்ச்சியாகச் செய்து வந்த மாந்த குல எதிர்ச் செயற்பாடுகளின்கேவலங்களுக்கெல்லாம் கேவலமாக உச்சக் கட்ட சிங்களஇனவெறியுடன் 1983 ஆம் ஆண்டு  நிகழ்த்தப்பட்ட இனவழிப்புப்படுகொலையின் பின்னர் துரித கதியில் உலகெங்கிலும் தமிழர்க்குஇழைக்கப்பட்ட கொடுமைகள் சென்றுவிடாமல் தடுப்பதற்காகஅப்போதைய அரச தலைவராகவிருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனஎன்பவரால்  6 வது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

எல்லாவற்றிற்கும் மேலாக, தமிழ்த் தேசிய இனத்தின்இறைமையையும் சுதந்திரத்தையும் வென்றெடுப்பதற்காகத்தமிழீழத் தனியரசு அமைக்கும் வரலாற்று முதன்மை பெற்றவட்டுக்கோட்டைத் தீர்மானம் 1976,மே,14 அன்று பிரகடனம் செய்தபின்னர் புரட்சிகர விடுதலை இயக்கங்களும் தமிழ் அரசியல்தலைமைகளும் அந்தத் தீர்மானத்தைச் செயலாக்க உறுதியாகவரிந்து கொண்டு களத்திலும் புலத்திலும் செயலாற்றியமைபன்னாட்டளவில் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியதும் இதனைத்தடுத்துவிட அப்போது ஜே.ஆர். ஜெயவர்த்தனா 6 ஆம் திருத்தச்சட்டம் என்ற அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரானசட்டத்தைக் கொண்டு வந்தார். அதனூடாக பிரிவினையைதூண்டுவோர்க்கு எதிராக சட்டங்களின் ஊடாக தண்டிக்கப்படவும்பிரிவினைவாதம் கோரமுடியாதவாறு சத்தியப்பிரமானம் எடுக்கும்நடைமுறையும் ஆறாவது திருத்தசட்டத்தில்சேர்க்கப்பட்டமையால் அப்போது தமிழர்விடுதலை கூட்டணிபாராளுமன்ற உறுப்பினர்களாக வடக்கு கிழக்கில் மக்களால்தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளைஇழந்த வரலாறும் எமக்கு மட்டுமே உண்டு.

 

அதன்பின்னரான காலத்தில் ஏற்பட்டஆயுதவிடுதலைப்போராட்டம் உக்கிரம் அடைந்த நிலையில்வடக்கு கிழக்கு முழுவதும் இரண்டு விதமான கட்டமைப்புகள்அதாவது இராணுவகட்டுப்பாடு, விடுதலைப்புலிகள் கட்டுப்பாடு எனஇரண்டு வகையான நிர்வாக கட்டமைப்புகள் இருந்தவேளையிலதான் 2001 ம் ஆண்டு தமிழ்தேசிய கூட்டமைப்புவிடுதலைப்புலிகளின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டது வரலாறு.

2009 போர் மௌனித்து விட்டபின்னர் சிலர்தமக்கு விரும்பியபடி வரலாறுகளை திரிவுபடுத்தி தமிழ்தேசியகூட்டமைப்பு உருவாக்கத்துக்கும் விடுதலை புலிகளுக்கும்சம்மந்தம் இல்லை என்ற மாதிரி கட்டுரை எழுதுகின்றனர் இதுநகைப்பான விடயம் என்பதை இலகுவாக புரிந்துகொள்ளலாம்.

வடக்கு கிழக்கில் பலமான ஒரு ஆயுதப்போராட்ட இயக்கம்காலூன்றி உள்ள நிலையில் அவர்களுக்கு தெரியாமல் அல்லதுஅவர்களின் அனுமதியின்றி அதே வடக்கு கிழக்கில் உள்ள ஏனையவிடுதலை இயக்கங்களையும், அரசியல் கட்சிகளையும் ஒன்றித்துஒரு கட்டமைப்பாக ஒரு அரசியல் கட்சியாக இயங்கமுடியுமா? அப்படி அரசியல் கூட்டமைப்பாக சுதந்திரமாக வடக்கு கிழக்கில்மாவட்டங்களில் தேர்தலில் போட்டியிட அனுமதித்திருப்பார்களா? என்பது கூட தெரியாத சில கட்டுரையாளர்கள் வரலாற்றைமறைக்க முற்படுவது ஏன் என்று தெரியாது.

ஆனால் சாதாரணதமிழ்மக்களுக்கு மட்டுமல்ல சிங்கள மக்களுக்கும் அன்றையகாலச்சூழல் எப்படி இருந்தது எவர் களத்தில் பலமாய்செயல்பட்டனர் என்பதெல்லாம் நன்கு தெரியும் என்பதால்மேற்கொண்டு அதை நான் அலட்டவில்லை.

தற்போதுஅனைத்துலக சமூகத்துடன் எமது தமிழ்தேசிய அரசியல்சென்றுள்ள இந்த வேளையில் சரியான நீதி சர்வதேசத்தின்ஊடாகவே பெறவேண்டும் என்பதால் தற்போது வடக்கு கிழக்குமுழுவதும் இடம்பெறும் தமிழ்தேசிய ஜனநாயகவழிப்போராட்டங்கள் யாவும் சர்வதேசத்தை்நோக்கியதாகவேஉள்ளது அதன் ஒன்றாகவே தற்போது மட்டக்களப்புமாமாங்கேஷ்வர ஆலயத்திற்கு முன்னாள் இடம்பெறும் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டமும் இன்று பத்துநாட்களாதொடர்கிறது எனவும் மேலும் கூறினார்.