சாரா பற்றி அமைச்சர் சொன்ன பதில்.

புலாஸ்தினி என அழைக்கப்படும் சாரா இந்தியாவுக்கு தப்பிச் சென்றார் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை  அவ்வாறு ஆதாரங்கள் இருந்தால் தாக்குதல்கள் தொடர்பாக சாராவை விசாரிக்க ஒரு வாய்ப்பை வழங்குமாறு அரசாங்கம் இந்திய அரசிடம் கோருமென அமைச்சர் உதய கம்மன்பிலா தெரிவித்தார்.

அவர் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

சாரா இலங்கையின் குடிமகள் என்பதால், அவரை ஒப்படைக்கவும், விசாரணைகளுக்காக இலங்கை அரசிடம் ஒப்படைக்கவும் இந்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் என்று அவர் மேலும்  தெரிவித்தார்..