மாவட்ட குடி நீர் சம்பந்தமான பிரச்சினைகளை இனங்கானும் விசேட கருத்தறியும் கலந்துரையாடல்!

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் குடி நீர் சம்பந்தமான பிரச்சினைகளை தீர்க்கும் முகமாக மாவட்ட மட்டத்தில் விசேட கருத்தறியும் கலந்துரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் இன்று(09) காலை 10.00 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது மாகாண ரீதியில் இடம்பெற்றிருந்தாலும் மாவட்டங்கள் மற்றும் பிரதேசங்களிற்கிடையிலான பிரச்சினைகள் வேறுபட்டுள்ளதைக் கருத்திற் கொண்டு பிரதேச ரீதியாக கருத்துக்களை உள்வாங்கி கொள்கைத்திட்டமென்றை உருவாக்குவதற்கான விசேட நீண்ட நேர கலந்துரையாடலாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச் செயலமர்வில் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஜெயநாத்கேரத், உதவிப்பணிப்பாளர் தனுச்விஜயசூரியா, உதவிப் பணிப்பாளர் ஜயசூரியன், தேசிய நீர் வழங்கல் மற்றும் அதிகார சபையின் பொறியியலாளர் எம்.ஏ றபீக், பிராந்திய முகாமையாளர் ஜெயதீசன், பிரதம பொறியியலாளர் வி.உதயசீலன், மாவட்ட நீர்ப்பாசன பணிப்பாளர் சுதாகரன், நீர் வழங்கல் அமைச்சரின் மாவட்ட இணைப்பாளர் பி.விஜிதரன், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் கிருபாசுதன், பிரதேச செயலாளர்கள், மாந்தை கிழக்கு உதவிப் பிரதேச செயலாளர், அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப்பணிப்பாளர் ரவி, பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், கிராம சேவகர், சமூக மட்ட நீர் வழங்கல் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலதரப்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.