நாடும், தேசமும், உலகமும் அவளே.

“நாடும், தேசமும், உலகமும் அவளே” எனும் தொனிப்பொருளில் மகளீர் தினம் இன்று (08) இடம்பெற்றது.

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக மகளீர் தின நிகழ்வு பனிச்சையடிமுன்மாரி கிராம உத்தியோகத்தர் பிரிவில் பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஷ் தலைமையில் நடைபெற்றது.

கிராம மக்களின் பங்குபற்றுதலுடன், இடம்பெற்ற நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமை முகாமையாளர், காவல்துறை உத்தியோகத்தர்கள் மற்றும் பல உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.