சௌபாக்கிய வாரத்தினை முன்னிட்டு உள்ளுர் உணவுப் பயன்பாட்டினை மேம்படுத்தலும் தொற்றா நோய் கட்டுப்பாடும்  

அனுருத்தன்

சௌபாக்கிய வாரத்தினை முன்னிட்டு உள்ளுர் உணவுப் பயன்பாட்டினை மேம்படுத்தலும் தொற்றா நோய் கட்டுப்பாடும் என்ற தொணிப்பொருளில் விழிப்புணர்வு கருத்தரங்கு சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் ஒரு நிகழ்வாக மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமூர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவினால் இன்று பிரதேசத்தில் உள்ள சமூர்த்தி சமூதாய அமைப்புக்களின் தலைவர்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது அன்றாடம் மக்கள் உட் கொள்ளும் உணவு தொடர்பான விடயங்கள் மற்றும் தொற்றா நோய் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
கோறளைப்பற்று மத்தி உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ரமீஸா தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் மாவட்ட சமூர்த்தி கணக்காளர் எஸ்.எம்.பஸீர்,சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரி.நஜீப்கான்,சமூகநல வைத்திய அதிகாரி எம்.எம்.நிம்சாத்,சமூர்த்தி முகாமையாளர் எஸ்.வீ.எம்.ருமைஸ்,வங்கி முகாமையாளர் எஸ்.ரவிச்சந்திரன்,திட்ட முகாமையாளர் ஏ.எல்.சரீப், சமூக அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் ஏ.எல்.ஜயூப்கான் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் பங்கு பற்றியவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி வைக்க்ப்பட்டது