மக்கள் எதிர்ப்பால் இரணைதீவு கைவிடப்படும் சாத்தியம்!

(வி.ரிசகாதேவராஜா)


கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை இரணைதீவில் நல்லடக்கம் செய்வதென்ற  அரசாங்கத்தின் தற்காலிகமான தீர்மானம் கைவிடப்படலாமென தெரியவருகிறது.

அங்கு தொடரும் மக்களின் போராட்டமும் சமயத்தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளது அழுத்தங்களும் இரணைதீவு கைவிடப்படக்காரணம் எனத்தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை முஸ்லிம்களின் ஜனாசாக்களை அடக்க அம்பாறை மாவட்டத்திலுள்ள இறக்காமம் பகுதியும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஓட்டமாவடிப் பகுதியும் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறது. புத்தளத்திலும் ஒருஇடம் பார்க்கப்பட்டிருக்கிறது.