இலங்கையின் 5வது இளைஞர் பாராளுமன்றம் இருதினங்கள் நடைபெற்றது.

எஸ்.எஸ்.அமிர்தகழியான்)
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற இளைஞர்களை வலுப்படுத்தி சிறந்த தலைமைத்துவம் உள்ள நாளைய தலைவர்களை உருவாக்கும்  செயல்திட்டமான இளைஞர் பாராளுமன்றமானது கடந்த 1ம் 2ம் திகதிகளில் மகரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்றது.

இலங்கை சோசலிச குடியரசின் பாரளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா பிரதம அதியாக கலந்து கொண்டு இளைஞர் பாராளுமன்றத்தினை வைபவரிதியாக ஆரம்பித்து வைத்தார். அமைச்சர்களின் தெரிவு ஆரம்பத்தில் நடைபெற்று முடிந்திருந்த நிலையில் அனைவருக்கான சத்தியப்பிரமான நிகழ்வு நடைபெற்றதைத்தொடர்ந்த சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது.
பாராளுமன்றத்தினை போன்று இருக்கைகள் அமர்வுகள் எல்லாம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டுமோ அதைப்போன்றுதான் இந்த இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களும் நடந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இன் நிகழ்விற்கு பாராளுமன்ற உறுப்பினரும் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சருமான நாமல் ராஐப~;ச, மின் வலுசக்தி அமைச்சர் டலஸ் அழகுபெரும, இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகே கமகே, தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர் நாயகம் திசேரா ஜயசிங்க மற்றும் கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள், திணைக்கள தலைவர்கள், பணிப்பாளர்கள,; மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உதவிப்பணிப்பாளரும் இளைஞர் பாராளுமன்ற பிரதம மொழிபெயர்ப்பாளருமான அலைடின் ஹமீர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.