சம்மாந்துறையில் பட்டதாரிகளுக்கான தலைமைத்துவ பயிற்சி நெறிகள் ஆரம்பம்

ஐ.எல்.எம். நாஸிம், நூருல் ஹுதா உமர்

சம்மாந்துறை பிரதேச செயலகத்தினால்சம்மாந்துறை வலயக்கல்வி அலுவல நிர்வாகத்தின் கீழ் உள்ள பாடசாலைகளில் பயிற்சிக்காக இணைக்கப்பட்ட 140 பட்டதாரி பயிற்சி ஆசிரியர்களை விடுமுறை காலத்தில் திசைமுகப்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ் ஆசியர்களுக்கு தேவையான தலைமைத்துவ  பயிற்சிகள் வழங்கும் நிகழ்வு  சம்மாந்துறை வலயக்கல்வி பணிமனையின் பணிப்பாளர் எம்.எஸ் சஹதுல் நஜீம் தலைமையில் இன்று (04) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இன் நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். இப் பயிற்சி நெறியானது.பட்டதாரி பயிற்சி ஆசிரியர்களை  மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு சம்மாந்துறை வலய ஆசிரியர் பயிற்சி நிலையம் ,சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகம்,சம்மாந்துறை அல் முனீர் பாடசாலை போன்ற இடங்களில் 06 நாட்கள் நடைபெற உள்ளது