வாகரை மற்றும் கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவுகளுக்கான அபிவிருத்திக்குழுக் கூட்டடங்கள்.

(ரக்ஸனா)

மட்டக்களப்பு மாவட்டம் வாகரை மற்றும் கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவுகளுக்கான அபிவிருத்திக்குழு கூட்டங்கள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைதலைவருமான தலைவர் சிவநேசதுரை சந்தரகாந்தன் அவர்கள் தலைமையில் புதன்கிழமை(03) இடம்பெற்றது.

இக்கூட்டத்தின் போது உள்ளுர் பொருளாதாரத்தினை கட்டி எழுப்புதல், கிராமிய முதலீட்டாளர்களை ஊக்குவித்தல், கல்வி ரீதியான வளர்ச்சி, போதைப்பொருள் தடுப்பு டெங்கு நோய் ஒழிப்பு மற்றும் விவசாய தென்னை மரமுந்திரிகை செய்கை ஊக்குவிப்பு, பசளை உற்பத்தி, வறுமை ஒழிப்பு, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்துதல், இறால் நண்டு வளர்ப்பு ஊக்குவிப்பு, வெளிநாட்டு தொழில் வாய்ப்பு, கால்நடை, சுற்றுலா, சமூர்த்தி,மனைசார் கைத்தொழில் போன்றவற்றை விருத்தி செய்வது தொடர்பான வேலைத்திட்டங்கள்.

மற்றும் சகலவிதமான உட்கட்டமைப்பு வசதிகளையும் விருத்தி செய்தல், அனர்த்த முகாமைத்துவம், மீள் உற்பத்தி, சுகாதார மேம்பாடு, நுகர்வோர் சேவை மற்றும் பாதுகாப்பு, விளையாட்டு, சுத்தமான குடிநீர் வசதிகளை ஒழுங்கு செய்தல், போக்குவரத்து போன்ற பல விடயங்களை விருத்தி செய்வது தொடர்பான தீர்மானங்களும் முன்மொழிவுகளும் அங்கு மேற்கொள்ளப்பட்டன.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாள கோ.கருனாகரம், இரா.சாணக்கியன், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைத் தவிசாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், சுகாதார பொது பரிசோதகர்கள் உட்பட பல அதிகாரிகளும் பொது அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.