மாகாண சபை தேர்தலை நடத்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை

மாகாண சபை தேர்தலை நடத்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சர் உதய கம்மன்பில  தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதம் மாகாண சபை தேர்தல் நடைபெறும் என்ற ஊடக அறிக்கைகள் தொடர்பாக  கொழும்பு ஊடகமொன்று அமைச்சரிடம் வினவியபோதே அமைச்சர் இக்கருத்தினை தெரிவித்துள்ளார்.

மாகாண சபை தேர்தல்களை நடத்துவது தொடர்பான முடிவை அமைச்சரவை எடுக்க வேண்டும் என்பதையும், அமைச்சரவையில் அத்தகைய விவாதம் எதுவும் நடைபெறவில்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்..