ஒலுவில் அல்-ஹம்ரா மகா வித்தியாலய 2020 க.பொ.த. சாதாரண தர மாணவர்களின் விடுகை விழா நிகழ்வுகள்

(எஸ்.அஷ்ரப்கான்-)

ஒலுவில் அல்-ஹம்ரா மகா வித்தியாலய 2020 க.பொ.த. சாதாரண தர மாணவர்களின் விடுகை விழா நிகழ்வுகள் சுகாதார வழிமுறைகளை சிறப்பாக பின்பற்றி அண்மையில் பாசாலையில் நடைபெற்றது.

பாடசாலையின்  அதிபர் அஷ்-ஷெய்க் யூ.கே.அப்துர் ரஹீம் தலைமையில் வலய தலைவர் ஏ.எம். அமானுள்ளாஹ்வின் வழிநடாத்தலில் நடைபெற்ற
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஐ.றைசால் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இங்கு நடைபெற்றதுடன் கடந்த வருட விசேட பரீட்சையில்  சிறப்பாக சித்தியடைந்த மாணவர்களும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர் எம்.ஏ.கமறுந் நிஸா, உதவி அதிபர்களான எம்.எச்.எம்.நஸீம், ஏ.ஜே.எம்.றினீஸ் உட்பட ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.