அரசினால் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்களை இளைஞர் யுவதிகள் கிராம புறங்களில் மக்கள் மயப்படுத்தி செயல்படும்போது பல பிரச்சனைகள் தீர வழி பிறக்கும்.

காதர் மஸ்தான் எம்.பி.

( வாஸ் கூஞ்ஞ)

அரசினால் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்களை இளைஞர் யுவதிகள் கிராம புறங்களில் மக்கள் மயப்படுத்தி செயல்படும்போது பல பிரச்சனைகள் தீர வழி பிறக்கும். வெளிநாடுகளில் படித்து பட்டதாரிகளாக உள்ளவர்களும் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பில் உள்வாங்கப்படுவர் என்பதை தெரிவித்துக் கொள்ளுகின்றேன் என வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் முல்லைத்தீவு ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவருமான காதர் மஸ்தான் இவ்வாறு தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இளைஞர் மற்றும் மகளீர் மாநாடு மன்னாரில் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் முல்லைத்தீவு ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவருமான காதர் மஸ்தான் தலைமையில் மன்னார் நகர சபை மண்டபத்தில் சனிக்கிழமை (27.02.2021) காலையில் நடைபெற்றது. இவ் கூட்டத்தில் புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் பியங்க பிரதம அதிதியாகவும் மற்றும் நாமல் ராஐபக்சவின் இணைப்பாளர் பாலித ஆகியோரும் இதில் கலந்த கொண்டனர்.

வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் முல்லைத்தீவு ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவருமான காதர் மஸ்தான தொடர்ந்து இங்கு தெரிவிக்கையில்

எமது ஜனாதிபதியின் தூரநோக்கின் அடிப்படையிலும் எமது பிரதமரின் செயல் திட்டத்திலும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகருமான பசில் ராஜபக்ச தலைமையில் நடைபெற்றுவரும் திட்டங்களுக்கு அமைவாக இன்று (சனிக்கிழமை 27.02.2021) எம்மை இங்கு ஒன்றுக் கூட்டியுள்ளது.

இன்று இளைஞர் யுவதிகள் நீங்கள் இங்கு கூடியிருப்பது எமது அரசின் நிலைப்பாடுகளை திட்டங்களை மக்கள் மயப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நாம் இன்று ஒன்று கூடியிருப்பதற்கான பிரதான நோக்கமாகும்.

எமது அரசின் திட்டங்கள் மக்களுக்கு பயண்படக்கூடியதாக எமது கட்சியன் நான்காவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நாம் இந்த மாநாட்டை நடாத்துகின்றோம்.

இளைஞர் அணியினராகிய நாம் ஒரு தீர்மானத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது எமது அரசின் செயல்பாடுகளையும் எமது கட்சியின் அபிவிருத்தி திட்டங்கள் போன்ற செயல்பாடுகளை மக்கள் மயப்படுத்தப்பட வேண்டும் அத்துடன் மக்களுக்கு எமது செயல்பாடுகளை தெளிவூட்ட வேண்டும் என்பதாகும்.

எமது ஜனாதிபதி பதவியை பொறுப்பேற்ற கையோடு கல்வி தகமையற்ற ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கி வருகின்றார். ஓரு லட்சம் கிலோ மீற்றர் கிராமபற வீதிகளை அபிவிருத்தி செய்வது ஜயாயிரம் குளங்கள் அபிவிருத்தி செய்வது மற்றும் வரவு செலவு திட்ட்தின் கீழ் கிராமபறங்களின் அபிவிருத்திகளுக்கு என நிதிகள் ஒதுக்கீடு செய்திருப்பது போன்ற இவ்வாறான திட்டங்கள் எல்லாம் மக்கள்மயப்படுத்தப்படல் வேண்டும் என்பது எமது அரசின் நோக்கமாகும்.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இளைஞர்களாகிய நீங்கள் அவரின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தபோது நீங்கள் பல இன்னல்களுக்கு உள்ளாகினீர்கள் என்பது எமக்குத் தெரியும். இதற்கெல்லாம் நாம் முகம் கொடுத்தோம். இதனால் நாம் சிறுபான்மை மக்கள் அவரின் வெற்றிக்கு கைகொடுத்துள்ளோம்.

இதெற்கெல்லாம் காரணம் உங்களைப் போன்ற இளைஞர் யுவதிகளின் அர்ப்பணிப்பான செயல்பாடுகள்தான். இந்த அரசு ஆட்சிக்கு வருமுன் உங்களிடம் இருந்த ஊக்கம் அர்ப்பணிப்பு குறைந்து விட்டதாக எமது கட்சியின் சிரேஷ்ட தலைவர்மார் நினைக்கின்றனர். இது நிவர்த்தி செய்யப்பட வேண்டும்

கடந்த காலங்களில் வன்னி தேர்தல் தொகுதியில் தேர்தல் காலத்தில் முதலாவது இடம் பிடிப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பாகும். இரண்டாவது இடம்பிடிப்பது முன்னாள் அமைச்சர் ரிஷாட் எந்த கட்சியுடன் இணைகின்றாரோ அந்த கட்சி இடம்பிடிக்கும். இதற்கு பிறகுதான் ஏனைய கட்சிகள் தெரிவு செய்யப்படும்.

கடந்த தேர்தல்களில் என்ன நடந்தது. ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வந்தது. இதற்கு உங்களைப்போல் இளைஞர் யுவதிகளின் பாரிய அர்ப்பணிப்பே ஆகும். இதற்காக நான் உங்களுக்கு இந்த நேரத்தில் நன்றியுடன் நினைவு கூறுகின்றேன்.

ஆனால் இப்பொழுது உங்கள் மத்தியில் சோர்வை காண்கின்றோம். நாம் இனித்தான் உற்சாகத்துடன் செயல்பட வேண்டும். ஜனாதிபதி பிரதமர் அமைச்சர்கள் இவர்களால் முன்னெடுக்கப்படும் திட்டங்களை நாம் மக்கள்மயப்படுத்தலில் இளைஞர்களாகிய நீங்கள் முன்னின்று செயல்பட வேண்டும்

முன்னைய அரசின் காலத்தில் வேலை வாய்ப்புக்கள் வீதி அபிவிருத்திகள் மற்றும் குளக்கட்டுக்கள் போன்றவைகள் அபிவிருத்தில் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே காணப்பட்டன. ஆனால் இப்பொழுது அப்படியல்ல இதை நீங்கள் மக்கள் மத்தியில் எடுத்தியம்ப முடியும்.

உங்கள் மத்தியிலிருந்து தற்பொழுது வரும் புகார் வெளிநாடுகளில் படித்து இங்கு பட்டதாரிகளாக வந்திருப்போர் வேலைவாய்ப்பில் புறக்கணிக்கப்படுகின்றனர் என்று. இப்பொழுது இவர்களின் தரவுகள் ஒன்லைனில் கோரப்பட்டுள்ளது ஏனென்றால் எதிர்காலத்தில் பட்டத்தாரிகளுக்கான வேலைவாய்ப்பில் இவர்களும் சேர்த்துக் கொள்ளப்பட இருக்கின்றார்கள் என்பதையும் இங்கு கூறிக்கொள்ளுகின்றேன்.

இங்கு விவசாயமாக இருக்கலாம் கால்நடைகளாக இருக்கலாம் மீன்பிடியாக இருக்கலாம் இளைஞர் யுவதிகளின் பிரச்சனைகளாக இருக்கலாம் சுயதொழில் வேலை வாய்ப்புக்களாக இருக்கலாம் வாழ்வாதாரமாக இருக்கலாம் இவைகள் எல்லாம் ஒரு ஒழுங்கமைப்பில் இடம்பெற்று வருகின்றன.

கடந்த காலங்களில் பலர் அரசியல் ரீதியாக புறக்கணிக்கப்பட்டனர். எமது கட்சியின் கிளைகள் கூட உருவாக்க முடியாத நிலை காணப்பட்டது. இதற்கான  விமோசனம் பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் நாம் ஒவ்வொரு கிராம அலுவலகர் பிரிவிலும் எமது கட்சியின் கிளைகளை உருவாக்கி செயல்பட வேண்டும்.

நாம் பல சமூகத்தை சார்ந்தவர்கள் இந் நாட்டில் வாழ்கின்றோம். ஒரு குடும்பத்தில் பிரச்சனைகள் வந்து போவதுபோல் இந்த நாட்டிலும் வந்து மறையும். இவற்றை எதிர் கட்சியினர் பூதாரமாக்குவர். நாங்கள் மிகவும் அவதானமாக பிரச்சனைகளுக்கான தீர்வுகளை பெறுவதில் நிதானமாக செயல்பட்டு வருகின்றோம்.

ஆகவே கிராம பறங்களிலுள்ள இளைஞர் யுவதிகள் ஒன்றினைந்து செயல்படும்போது கிராமபறங்களிலுள்ள பல பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்றுக் கொள்ளலாம். அதற்கான ஆலோசனைகளையும் எங்களிடம் பெற்று செயல்படலாம்.

நாங்கள் இப்பொழுது ஆளும் கட்சியில் இருந்து செயல்படுகின்றோம். வேலை செய்யக்கூடிய நிலையில் இருக்கின்றோம் பிரச்சனைகள் வருகின்றபோது அவற்றை அடையாளப்படுத்தி அவற்றை நிவர்த்தி செய்யக்கூடிய நிலையில் இருக்கின்றோம் ஆகவே கடந்த காலத்தில் நடைபெற்ற பாதிப்புக்களை நாம் மறந்து அவர்களையும் எம்முடன் இணைத்து நாம் பயணிக்க வேண்டும் என்றார்.