கொக்கட்டிச்சோலை பகுதியில் டெங்கு ஒழிப்பு.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இன்று (28) நடைபெற்றது.

மகிழடித்தீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் றமேஸ் தலைமையில் இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் கிராம மக்கள் வீட்டுக்கு ஒருவர் வீதம் கலந்து கொண்டு தமது பங்களிப்பை மேற்கொண்டனர்.

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரம் ஆலய வெளி சூழல், கலாசார மண்டபம் போன்ற இடங்களில் காணப்பட்ட நுளம்பு உற்பத்தியாக நீர் தேங்க கூடிய பொலித்தீன் பைகள், குரும்பைகள், கண்ணாடி போத்தல்கள், சிரட்டைகள், பிளாஸ்ரிக் போத்தல்கள் என்பன அகற்றப்பட்டதுடன், சூழலில் காணப்பட்ட குப்பைகள் அகற்றப்பட்டன.

பொதுச்சுகாதார பரிசோதகர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச சபை ஊழியர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இவ் டெங்கு ஒழிப்பின் இறுதியில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு கருத்துக்களும் சுகாதார வைத்திய அதிகாரியால் கூறப்பட்டது.