இலங்கைகுறித்து ஜேர்மனியின் கவலை

இலங்கையை, ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரையை ஏற்று நடைமுறைப்படுத்துமாறு சொல்லியுள்ள சுவிஸ், முன்னைய தீர்மானங்களின் உள்ளடக்கங்களை நடைமுறைப்படுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நிலைமாறு கால நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க விடயங்களில் முன்னேற்றம் போதுமானதாக இல்லையென்று, நோர்வே ஜெனீவாவில் கூறியுள்ளது.

இலங்கை குறித்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை வரவேற்பதாக கனடா தெரிவித்துள்ளது.

ஜெனீவாத் தீர்மானத்திலிருந்து விலகும் இலங்கையின் முடிவு குறித்து கவலையடைவதாகத் தெரிவித்துள்ள கனடா, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலிற்கான உள்நாட்டு நடைமுறைகள் தோல்வியடைந்து, தொடர்ச்சியான பலாபலன்களை அளிக்கத் தவறிவிட்டன என மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கையின் அரசமைப்பில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, காணாமல்போனவர்கள் அலுவலகம், இழப்பீடுகளிற்கான அலுவலகம் ஆகியவற்றின் சுதந்திரத்திற்கும், வலுவாகப் பயணிப்பதற்கும் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்துக் கவலையடைந்துள்ளதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது.

சிவில் சமூகத்திற்கான தளம் குறைந்து வருவது குறித்து நாங்கள் கவலையடைந்துள்ளோம். கடந்தகாலங்களில் பொறுப்புக்கூறலை முன்னெடுத்தவர்கள் தற்போது பழிவாங்கப்படுவது குறித்து அச்சமடைந்துள்ளனர் என ஜேர்மனி தெரிவித்துள்ளது.

அனைவரையும் உள்ளடக்கிய நீடித்த நல்லிணக்கத்திற்கு, கடந்தகால விடயங்களைக் கையாள்வது முக்கியம் என ஜேர்மனி நம்புகின்றது. கடந்தகாலங்களில் குற்றங்களைப் புரிந்தோர், இலங்கையின் அரசமைப்பில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் தேசிய மனித உரிமை ஆணைக்குழு, காணாமல்போனவர்கள் அலுவலகம், இழப்பீடுகளிற்கான அலுவலகம் ஆகியவற்றின் சுதந்திரத்திற்கும், வலுவாக பயணிப்பதற்கும் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து கவலையடைந்துள்ளதாக, ஜேர்மனி தெரிவித்துள்ளது.

சிவில் சமூகத்திற்கான தளம் குறைந்து வருவது குறித்து நாங்கள் கவலையடைந்துள்ளோம்,கடந்த காலங்களில் பொறுப்புக்கூறலை முன்னெடுத்தவர்கள், தற்போது பழிவாங்கப்படுவது குறித்து அச்சமடைந்துள்ளனர் எனவும் ஜேர்மனி தெரிவித்துள்ளது.

அனைவரையும் உள்ளடக்கிய நீடித்த நல்லிணக்கத்திற்கு கடந்தகால விடயங்களைக் கையாள்வது முக்கியம் என ஜேர்மனி நம்புகின்றது. கடந்தகாலங்களில் குற்றங்களைப் புரிந்தோர் தண்டிக்கப்படாத நிலை தொடரமுடியாது எனவும், ஜேர்மனி தெரிவித்துள்ளது.