தேசிய மாணவர் படையணியின் பணிப்பாளர் மட்டக்களப்பு விஜயம்-படங்கள்.

(என்.எம்.எம்.பாயிஸ்)
தேசிய மாணவர் படையணியின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் பீ.டப்ளியூ.பீ.ஜெயசுந்தர மட்டக்களப்பிலுள்ள 38வது படைப்பிரிவு தலைமையகத்திற்கு முதல் தடவையாக நேற்று முன்தினம் 23 விஜயம் செய்தார்.
எமது நாட்டில் சுமார் 140 வருட காலமாக வடக்கு,கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் இயங்கிவரும் தேசிய மாணவர் படையணி கடந்த 5 ஐந்து வருடங்களுக்கு முன்னர் வட-கிழக்கு மாகாணங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மட்டக்களப்பு கல்லடி புதுமுகத்துவாரம் புனித இக்னேசியஸ் வித்தியாலயத்தில் நிறுவப்பட்டுள்ள தேசிய மாணவர் படையணியின் 38வது படைப்பிரிவு தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வமாக விஜயம் செய்த பணிப்பாளர் இங்கு மாணவ படைச் சிப்பாய்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டு மரக்கன்று ஒன்றையும் நட்டி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து விளக்க உரைகளும் நடைபெற்றன.
இந்நிகழ்வில் தேசிய மாணவர் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஜி.டப்ளியூ,ஜி.எச். நிலந்த,கிழக்கு மாகாண பணிப்பாளர் கேணல் எம்.அநுரகுமார,பயிற்சி அதிகாரி லெப்டினன் நிப்ராஸ்கான்,நிருவாக நிறைவேற்று அதிகாரி லெப்டினன் எஸ்.ஸ்டாலி உட்பட மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஐந்து கல்வி வலயங்களின் பணிப்பாளர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளும் பிரசன்னமாயிருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 137 பாடசாலைகளில் தேசிய மாணவர் படையணி செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.