இக்பால் அலி
அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் குருநாகல் மாவட்ட மடிகே மதியாலக் கிளையின் ஏற்பாட்டில் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் உப தலைவர் மௌலவி எச். உமர்தீன் (ரஹ்மானி) அவர்கள் எழுதிய மஸ்ஜிதின் ஊடாக சமூகத்தை வலுவூட்வோம் மற்றும் பிரீதிமத் யுக திவியெக் கரா என்ற நூலும் ஹெப்பி மெரெச் என்கின்ற பெயரில் எழுதிய தமிழ் சிங்களம் ஆங்கில மும் மொழிகளிலான மூன்று நூல்களின் வெளியிட்டு வீழா 26-02-2021 நாளை பி.ப 6.30 மணி அளவில் பண்டாரகொஸ்வத்தை மடிகே மிதியால பாத்திமத்துஸ் ஸஹ்ரா முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியில் நடைபெறும்.
ஹக்கீமிய்யா அரபுக் கல்லூரியின் அதிபர் ஹிதாயத்துல்லாஹ் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் மௌலவி ஏ. ஏ. நவாஸ், எம். எப். அப்துல் சமது உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.