அம்பாறையில் 15 ஏக்கர் கஞ்சா தோட்டம் கண்டுபிடிப்பு.

அம்பாறை மாவட்டத்தின் லாகுகலா தேசிய பூங்காவில் 15 ஏக்கர் பரப்பளவில் கஞ்சா தோட்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் காவல்துறையினரால் இதுவரை  கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய கஞ்சாத்தோட்டம் இதுவென தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்கள்மீது பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் அக்கரைப்பத்து, சம்மாந்துறை, கல்முனை, பொத்துவில் மற்றும் கொழும்பு பகுதிகளுக்கும் கஞ்சா விநியோகித்ததாக தெரிய வந்துள்ளது.