காத்தான்குடி பொலிஸ் பிரிவில்; முகக்கவசம் அணியாதவர்கள் பொலிசாரினால் மடக்கிப் பிடிப்பு–

அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

ஜவ்பர்கான்–
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில்; முகக்கவசம் அணியாமல் நடமாடுபவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் நடவடிக்கையில் இன்றுகாலை காத்தான்குடி பொலிசார் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் பணிப்பின் பேரில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறியின் தலைமையில் இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது.
காத்தான்குடி குட்வின் சந்தி மற்றும் காத்தான்குடி பிரதான வீதிஇ கடற்கரை வீதி மற்றும மக்கள் கூடும் இடங்களில்  பொலிசார் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

முக க்கவசம் அணியாமல் வீதிகளல் நடமாடியவர்கள் மற்றும் வாகனத்தில் சென்றவர்கள் மடக்கிப்பிடிக்கப்பட்டு அவர்களது பெயர்  தேசிய அடையாள அட்டை இலக்கம் முகவரி என்பன பதிவு செய்யப்பட்டதுடன் சுகதார நடைமுறைகள் தொடர்பாகவும் அவர்களுக்கு பொலிசாரினால் விளக்கமளிக்கப்பட்டது.