தமிழ்தேசிய சொல்லாடலை நாளாந்த தமிழ்தேசியவாழ்வியலாக மாற்றவேண்டிய தார்மிகப்பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு.

அருட் தந்தை எழில்.

பின்முள்ளிவாய்க்கால் அரசியல் தளத்தில் பாரியபொறுப்புக்கள் ஊடகத்துறைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.  தமிழ்தேசியத்தின் செறிவாக்கம் இன்னும் அதிகமாக தேவைப்படும் இக்காலகட்டத்தில் தமிழ்தேசிய சொல்லாடலை நாளாந்த தமிழ்தேசியவாழ்வியலாக மாற்றவேண்டிய தார்மிகப்பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு என நேற்று திருமலையில் நடைபெற்ற சுபீட்சம் பத்திரிகையின் வெளியீட்டு நிகழ்வில் ஆசியுரை வழங்கியபோது தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

ஈழதேசியவிடுதலைக்கான பயணம் பல்வேறு பரிமானங்களைக்கொண்டிருந்தாலும் மிகநீண்டதுமானதென ஏனையவிடுதலைப்போராட்டங்களின் அனுபவங்களுக்கூடாக கற்றுக்கொள்ளமுடிகின்றது.

 தற்போதுபெரும்பாலான ஊடகங்கள் முதலாளித்துவ நிகழ்ச்சிநிரல்களையே முன்னெடுக்கின்றது.ஈழவிடுதலைப்போராட்டம் சகல ஏகாதிபத்தியத்துக்கும் எதிரானபோராட்டம்

ஏகாதிபத்தியத்துக்கு எதிரான மக்கள் விடுதலைமைய  பத்திரிகைதுறைதான் மாற்று வழிபத்திரிகை துறையாக மிளிரமுடியும்.பத்திரிகைதுறை மக்கள் இயக்கம் ஊடாகத்தான் மக்கள் விடுதலையை முன்னெடுக்கவேண்டும்.

வடகிழக்கில் பத்திரிகைத்துறை பன்முனை சவால்களை சந்தித்திருக்கும் இவ்வேளையில் வரலாற்றின் தார்மிகப்பொறுப்பினை உணர்ந்து தமிழ்மக்களின் மாற்று ஊடகமாக சபீடு்சம் விளங்கவேண்டும் என்றார்.