முஸ்லிம் மக்களின் விடயங்களையும் உள்ளடக்கி கிழக்குமாகாணப்பத்திரிகையாக சுபீட்சம் மிளிரவேண்டும்

யதிந்திரா.

முஸ்லிம் மக்களின் விடயங்களையும் உள்ளடக்கி கிழக்குமாகாணப்பத்திரிகையாக சுபீட்சம் மிளிரவேண்டுமென அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான த.யதீந்தீரா தெரிவித்தார்.

திருமலையில் நடைபெற்ற சுபீட்சம் வாராந்தபத்திரிகையின் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மிகவும் சவாலான விடயத்தை சுபீட்சம் குழுமத்தினர் மேற்கொண்டுள்ளார்கள்.பத்திரிகைகளுக்கு நிதிமூலங்களை பெறுவதில் உள்ள இன்றைய சிக்கலில் சுபீட்சம் வெளிவருகின்றது.

இப்பத்திரிக்கை கிழக்கு மாகாணத்துக்கென ஒரு நடுநிலைமையான பத்திரிகையாக வெளிவரவேண்டும்.வாசகர்களுக்கான கருத்துக்களங்களை அமைத்துக்கொடுப்பதுடன் உள்ளதை உள்ளபடி மக்களுக்கு சொல்லும் பத்திரிகையாக பிரகாசிக்க வேண்டும் என்றார்.