மாகாண சபைகள் குறித்த முடிவு விரைவில்!

மாகாண சபையை ஒழிக்கலாமா அல்லது தொடரலாமா என்பது குறித்து நமது அரசாங்கம் ஒரு கூட்டு முடிவை எடுக்க வேண்டும் எனவும் எதிர்காலத்தில் அதை நோக்கி செயல்படலாம் என்ற நம்பிக்கையுள்ளதாக புதியதாக கடமையேற்றுள்ள மாகாணசபைகள் உள்ளூராட்சி அமைச்சர் றொசான் ரணசிங்க தெரிவித்தார்.

பதவியேற்ற பின்னர் நேற்றுபொலன்னருவையில் நடைபெற்ற மத சடங்குகளைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

“மாகாண சபை தேர்தல் தொடர்பாக ஜனாதிபதியும் பிரதமரும் மட்டுமல்ல, நமது முழு அரசாங்கமும் கூட்டாக எடுக்க வேண்டிய முடிவு இது. நாம் அனைவரும் எடுத்த கூட்டு முடிவால் ஜனநாயகத்தை மதிப்போம், எதிர்காலத்தில் இந்த நாட்டின் அரசியலில் மக்களின் அனைத்து தேவைகளையும் கவனித்துக்கொள்வோம். ஏனெனில் மாகாண சபைகள் இன்னும் செயல்பட்டு வருகின்றன என்றார்.