பல்கலைக்கழகங்களுக்கு 10,579 மாணவர்கள் மேலதிமாக இணைக்கப்படவுள்ளனர்.

வரவிருக்கும் பல்கலைக்கழக ஆண்டுக்கு மொத்தம் 500 பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளனர் என பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

“இந்த ஆண்டு, கடந்த ஆண்டை விட 10,579 மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் சேர்க்கப்படுவார்கள். மேலும், இந்த மாணவர்களுக்குத் தேவையான விரிவுரையாளர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரிக்கப்பட்டு, சுமார் 500 விரிவுரையாளர்களை நியமிக்க  ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மற்ற ஆண்டுகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 30,000 ஆகும், இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 40,000 ஐ தாண்டும்.

அதன்படி, கூடுதலாக 481 மாணவர்கள் மருத்துவதுறைக்கும், 565 மாணவர்கள் பொறியியல் பீடங்களிலும், 2973 மாணவர்கள்  தொழில்நுட்ப பீடங்களிலும், 1099 மாணவர்கள் வர்த்தக மற்றும் முகாமைத்துவ பீடங்களுக்கும், 1680 மாணவர்கள் கலை மற்றும் 318 மாணவர்கள் அழகியல் பீடங்களுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். . ஒட்டுமொத்த அதிகரிப்பு 10,579 ஆகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.