WHOவின் முன்னுரிமைப்பட்டியலில் அரசியல்வாதிகள் இல்லை.

உலக சுகாதார அமைப்பின்கோவிட் தடுப்பூசிக்கான முன்னுரிமைகள் பட்டியலில் அரசியல்வாதிகள் இல்லையென மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ்  சுட்டிக்காட்டுகின்றார்.

“உண்மையில், எங்களிடம் இன்னும் 60,000 ஊசி மருந்துகள் உள்ளன, ஏனென்றால் இரண்டாவது  தடவை ஏற்றுவதற்கு 250,000 ஊசி மருந்துகளை சேமிக்க வேண்டும். சில காரணங்களால் இந்தியா அடுத்த சுற்றில் கோவ்ஷீல்ட் தடுப்பூசியை எங்களுக்கு வழங்கவில்லை என்றால், முதல் டோஸ் கொடுத்தவர்களுக்கு இரண்டாவது கொடுப்பதற்கு முடியாமல் போகலாம். . “முன்னுரிமை வரிசையில் ஏராளமான ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள் போன்றவர்கள் உள்ளனர். உலக சுகாதார அமைப்பு வழங்கிய வரிசையில் அரசியல்வாதிகள் யாரும் இல்லை  என்றார்.