2024 ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து புதிய அமைப்பாளர்களை நியமிக்க ஐ.தே.கட்சி முடிவு.

2024 ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து புதிய தொகுதி அமைப்பாளர்களை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது.

இலங்கையின் அனைத்து தொகுதிகளையும் உள்ளடக்கும் வகையில்  அமைப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கட்சியின் பொதுச் செயலாளர் பாலிதா ரேஞ்ச் பண்டார தெரிவித்தார்.

தற்போது  தொகதி அமைப்பாளர்களாக செயல்பட்டு வருபவர்களை தக்க வைத்துக் கொண்டு புதிய தேர்தல் அமைப்பாளர்களை நியமிக்க கட்சித் தலைவர் ரனில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியதாகவும்  நாட்டின் ஒவ்வொரு கிராமத்தையும் உள்ளடக்கிய மூன்று முக்கிய கட்சி ஆர்வலர்களை நியமிக்க  தலைமை அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.