செங்கலடி பிரதேச சபை நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்கள் புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு.

மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச சபை நூலகத்திற்கு நெதலாந்தில் வசிக்கும் சிறிரங்கநாதன் சிறிரஞ்சினி என்பவரால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான புத்தகங்கள் திங்கட்கிழமை கையளிக்கப்பட்டன.

செங்கலடி பிரதேச தவிசாளர் கௌரவ சர்வானந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஷ்வரன், ஞா.ஶ்ரீநேசன், உபதவிசாளர் இராமச்சந்திரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.