காத்தான்குடியில் சுய தொழிலில் ஈடுபடும் 10 பேருக்கு ஆடுகள்

ரீ.எல்.ஜவ்பர்கான்
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் சுய தொழிலில் ஈடுபடும் 10 பேருக்கு இன்று  (16.2.2021) ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டன.

சிறிலங்கா பொது ஜன பெரமுனவின் காத்தான்குடி செயற்பாட்டாளர் எம்.எஸ்.எம்.சிபானின் வேண்டுகோளவின் பேரில் பின்தங்கிய கிராமங்கள் அபிவிருத்தி, உள்நாட்டு கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு பொருளாதாரப் பயிர் ஊக்கிவிப்பு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் சிபாரிசினால் இந்த ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டன.
காத்தான்குடியிலுள்ள 10 பயணாளிகளுக்கு ஒரு பயணாளிக்கு 2 ஆடுகள் வீதம் வழங்கப்பட்டன.
இந்த ஆடுகளை வழங்கும் வைபவத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதய சிறீதர்,  சிறீலங்கா பொது ஜன பெரமுனவின் காத்தான்குடி செயற்பாட்டாளர் எம்.எஸ்.எம்.சிபான்  உட்பட. பிரதேச செயலக அதிகாரிகள்  கலந்து கொண்டனர்