தரிசான வயல் காணிகளில் மீள பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்ட வயல் அறுவடை விழா

(ஹஸ்பர் ஏ ஹலீம்)
கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கைவிடப்பட்ட தரிசுநிலக் காணிகளை மீள செய்கைக்கு உட்படுத்தல் எனும் நோக்கிற்கு அமைய திரியாய் கிராம சேவகர் பிரிவில் 30 வருட காலமாக கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட கொத்தியா வயல் குளமானது  மாவட்ட கமநல திணைக்கள உதவி ஆணையாளரின் கோரிக்கைக்கு அமைய கடந்த 2019_ 2020 வரை peace winds Japan நிறுவனத்தின் நிதி அனுசரனையோடு புனரமைப்பு செய்யப்பட்டது.

இக் குளத்தின் கீழ் கைவிடப்பட்ட நிலையில் இருந்த தரிசு காணியானது இம் முறை 2020/21 பெரும் போக செய்கையில் 20 ஏக்கர் செய்யப்பட்டு அதன் அறுவடை விழா விவசாயிகள் ஏற்பாட்டில் 12.02.2021 அன்று நடைபெற்றது.

கமநல அபிவிருத்தி திணைக்கள திருகோணமலை  மாவட்ட உதவி ஆணையாளர் திருமதி.வருணி அவர்கள் அறுவடையினை தொடங்கி வைத்தார்.  இவ் நிகழ்வில்  திருகோணமலை மாவட்ட விவசாய திணைக்கள உதவி பணிப்பாளர் , Peace winds Japan நிறுவனத்தினர், நீர்பாசன திணைக்கள பொறியியலாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், முன்னைநாள் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஏனைய பிரதேசங்களில் விளைச்சல் குறைந்த போதும் தரிசு காணியில் மேற்கொள்ளப்பட்ட வயல்களில் அறுவடை ஒரு ஏக்கருக்கு சராசரியா 1755 _ 1800 கிலோ வரையாக காணப்பட்டு இத்திட்டம் வெற்றியளித்துள்ளது.மேலும் இந்த வயல்களில் இனிவரும் காலங்களில் நஞ்சற்ற முறையில் விவசாயம் மேற்கொள்ளவும் விவசாயிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.