சூரியனுக்கு நன்றி செலுத்தி பொங்கல் விழா.

சூரியனுக்கு நன்றி செலுத்திய பொங்கல் விழா இன்று (12) இடம்பெற்றது.

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஷ் தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழா படுவான்கரை பிரதேசத்தின் நெல், தானியங்கள் உற்பத்திக்காக ஒத்துழைப்பினை வழங்கிய சூரிய பகவானுக்கு நன்றி கூறி பிரதேச செயலக வளாகத்திலுள்ள ஸ்ரீ சர்வசித்தி விநாயகர் ஆலய முன்றலில் ஆலய பிரதமகுரு ரவீந்திர சர்மா அவர்களினால் விசேட பூசை நிகழ்த்தப்பட்டது.

வெண் பொங்கல், உறைப்பு பொங்கல், இராசவள்ளி கிழங்கு பொங்கல், மரக்கறி பொங்கல் போன்ற பல்வகை சுவையுடனான பொங்கல் வகையுடன் பொது பொங்கலும் இடம்பெற்றது.