மூதூர் குமாரபுரம் படுகொலை 25ம் ஆண்டு நினைவு.

மூதூர் குமாரபுரம் கிராமத்தில் 1996ம் வருடம் சீருடை தரித்த ஆயுத படையினராலும் காடையர்களாலும் சுட்டு படுகொலை செய்யப்பட்ட 25 பேரின் நினைவு குமாரபுரம் விநாயகர் ஆலயத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

மதியம் பொங்கல் உடன் கூடிய பூசை வழிபாடு நடத்தப்பட்டது இப் பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

இதனைத் தொடர்ந்து குமாரபுரம் மயானத்தில் இறந்தவர்களின் உறவினர்களாலும் பொதுமக்களாலும் ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. 1996 இல்இரவு 8 மணியளவில் கிராமத்திற்குள் புகுந்த வீரர்கள் கிராமத்தில் உள்ளவர்களை சுட்டு கொண்டிருந்தனர். இச்சம்பவத்தில் 25 பேர் கொல்லப்பட்டதுடன் 26 பேர் படுகாயமடைந்தனர்.

மூதூர் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தால் பிரதேசமே அல்லோல கல்லோலப் பட்டது. இவர்களுக்கான நீதி வழங்கக்கோரி இந்த நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. காலையில் இப்பிரதேசத்திற்கு வந்த சிவில் உடை தரித்த போலிசாரும் புலனாய்வு உத்தியோகதர்களும் எந்த விதமான பதாகைகளையும் கட்ட வேண்டாம் என கூறி அவற்றினை அகற்றினர். பின்னர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்த 25 ஆவது வருட நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் பெருமளவிலான புலனாய்வு உத்தியோகத்தர்கள் பொலிசாரும் அங்கு காவல் கடமையில் ஈடுபட்டிருந்தனர். மதியம் இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டு காவலுக்கு அமர்த்தப் பட்டிருந்தனர். விதமான அசம்பாவிதங்களும் இன்றி சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இந்த நினைவு தினம் பொது மக்களாலும் உறவினர்களாலும் அனுஷ்டிக்கப்பட்டது. குமார