மட்டு.வவுணதீவில் 11 மில்லியன் செலவில் சுத்தமான குடிநீர் வழங்குல் திட்டம் ஆரம்பம்

ரீ.எல்.ஜவ்பர்கான்–
சகல மக்களுக்கும் சுத்தமான சுகாதாரமான குடிநீரை வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தின்கீழ நீர்வழங்கல் அமைச்சின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் குடிநீர்த் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் மற்றும் வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட பின்தங்கிய  கிராமமான வவுணதீவு  பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கொத்தியாபுலை கிராமத்தில் சுமார் 11 மில்லியன் ரூபாய் செலவில் குடிநீர்திட்டம் 10.2.2021 ஆரம்பித்து வைக்கபட்டது.
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் எக்சன் யுனிட்டி லங்கா நிறுவனம் இத்திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றது.இத்திட்டத்தினூடாக  412 குடும்பங்கள் நன்மையடையவுள்ளன.
வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் நடைபெற்ற குடிநீர்திட்ட ஆரம்ப வைபவத்தில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அதிகாரிகள் பிரதேச செயலக உத்தியேகாத்தர்கள் வவுணதீவு பிரதேச சபை தலைவர் எஸ்.சண்முகராசா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.