பொறுப்புக்கூறல் கடமையில் இருந்து இலங்கை ஒருபோதும் நழுவ முடியாது.பிரித்தானியா

 

ஐ.நா மனித உரிமை மாநாடு தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ ம.ஆ.சுமந்திரன் அவர்களிற்கும் பிரித்தானியாவின் இலங்கைக்கான தூதுவர் சாரா ஹல்டனிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று இன்று  புதன்கிழமை  2021-02-10 கொழும்பில் இடம்பெற்றது.

இதன்போது

இம்முறை புதிய பிரேரணை ஊடாக முன்னெடுக்கும். பொறுப்புக்கூறல் கடமையில் இருந்து இலங்கை ஒருபோதும் நழுவ முடியாது எனபிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டன்  தெரிவித்துள்ளதுடன் ஜெனிவா விவகாரங்கள், இலங்கை அரசின் தற்போதைய செயற்பாடுகள் குறித்தும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டன என்று சுமந்திரன் எம்.பி. குறிப்பிட்டார்.