திருகோணமலையில் உழுந்து அறுவடை விழாவும் மக்கள் குறைகேள் நிகழ்வும்.!

(ஹஸ்பர் ஏ ஹலீம்)
AJWS நிதி அனுசரணையுடன் AHRC நிறுவனத்தினால் “வாழ்வாதாரமும் உணவு
நிலைபேறு தன்மையும் ”(AHRC- Covid – 19 Response) எனும் திட்டத்தின்
கீழ் கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலை மாவட்டத்தில் திருமலை
பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள விளாங்குளம் கிராமத்தில்
பெண்கள் தலைமை தாங்கும் மற்றும் விவசாய நடவடிக்கைகளில் ஆர்வமுள்ள
பெண்களுக்கான வாழ்வாதார செயற்பாடுகளுக்கான உள்ளீடுகள் 2020ம் ஆண்டு
வழங்கப்பட்டது.
இவ்வாறு வழங்கப்பட்ட வாழ்வாதார செயற்பாடுகளில் ஒன்றான உழுந்து
உற்பத்திகளின் அறுவடை நிகழ்வும் மக்கள் குறைகேள் நிகழ்வும் ; அகம்
மனிதாபிமான வள நிலையம் (AHRC) பிரதி இணைப்பாளர் அழகுராசன் மதன்
அவர்களின் தலைமையில் ; இன்று(10.02.2021)இடம்பெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக திருமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர்
ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்கள் வருகை தந்து இவ் அறுவடை நிகழ்வினை
ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் உரிய கிராமத்தின் கிராம அதிகாரி, பொருளாதார அபிவிருத்தி
உத்தியோகத்தர்கள், அகம் மனிதாபிமான வள நிலையத்தின் உத்தியோகத்தர்கள்,
பொதுமக்கள், பயனாளிகள், பெண் விவசாயக் குழுக்கள், விவசாய சம்மேளனங்கள்,
இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிரதேச செயலாளர் அவர்களிடம்
உரிய விளாங்குளம் கிராம மக்கள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும்
சவால்கள் தொடர்பாக கலந்துரையாடியிருந்தனர்.
குறிப்பாக தாங்கள் குடியிருக்கும் குடியிருப்பு காணி மற்றும் ; ஜீவநோபாய தோட்டக்
காணிகள் வன வள பாதுகாப்புத் திணைக்களத்தினால் உத்தியோக பூர்வமாக
விடுவிக்கப்படாத நிலையிருப்பதும், தங்களுக்கான காணி ஆவணம் இன்னும்
வழங்கப்படாத நிலையில் ; தாங்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து
வருவதாகவும் ; குறிப்பிட்டிருந்தனர்.
அத்துடன் தாங்கள் பல ஆண்டுகளாக உரிய அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்
தலைவர்களிடம் தங்களது காணிப்பிரச்சினைக்கான தீர்வினைப் பெற்றுத்தருமாறு பல
தடவைகளில் மகஜர்களையும், சந்திப்புக்களையும் ஏற்படுத்தியும் இன்றுவரை
சாதகமான எந்த முடிவுகளும் தமக்குக் கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்ட மக்கள்
தாங்களாவது இதற்கான ஒரு முடிவினை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்
கொண்டனர்.
அதுமட்டுமன்றி தங்களது கிராமத்திலுள்ள மாணவர்கள் கப்பல்துறை
கிராமத்திலுள்ள கப்பல்துறை சரஸ்வதி வித்தியாலயத்திற்கு கல்வி கற்பதற்காக
செல்வதாகவும், தமக்கு போக்குவரத்து வசதிகள் இல்லையெனவும் குறிப்பிட்ட
மக்கள் மாணவர்னகளுக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி தருமாறு

கூறியதுடன், தங்களது கிராமத்தில் ஆரம்பப் பிரிவு பாடசாலை ஒன்றினை அமைக்க
நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டனர்.

இதற்கு பதிலளித்த பிரதேச செயலாளர் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்
விளாங்குளம் கிராம மக்கள் கடந்த பல வருடங்களாக எதிர்நோக்கிய வரும் காணி
தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வு மிக விரைவில் கிடைக்கும் எனவும், இது
தொடர்பாக வன வளத் திணைக்களத்துடன் கதைத்துக் கொண்டு வருகின்றோம்
ஆகையால் நீங்கள் கவலையடைய வேண்டாம் எனவும் குறிப்பிட்டார்.