வறுமைக்குட்பட்ட மாணவருக்கு துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு

வறுமைக்குட்பட்ட மாணவி ஒருவருக்கு துவிச்சக்கரவண்டி இன்று (09) மறத்தமிழர் கட்சியூடாக வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு மேற்கு வலயத்திற்கு உட்பட்ட கன்னங்குடா மாகா வித்தியாலய அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க அப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி செல்வி பகிரதன் ரகீசனா என்பவருக்கே மறத்தமிழர் கட்சியின் இளைஞர் அணி உதவித்திட்டத்தின் ஊடாக துவிச்சக்கரவண்டி வழங்கிவைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மறத்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.வேலப்பு அன்பழகன் மற்றும் மறத்தமிழர் கட்சி மாவட்ட இணைப்பாளர் திரு ம.ஜெயக்கொடி மறத்தமிழர் கட்சி இளைஞர் அணி இணைப்பாளர் கேணுஜன் செயலாளர் கிரிசாந்தன் ராஜுசுதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.