உலகிலேயே மிகவும் விஷம் கலந்த நாடு இலங்கை

உலகிலேயே மிகவும் விஷம் கலந்த நாடு இலங்கை என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் அனுருத்தா பதேனியா தெரிவித்துள்ளார்.

அவர் கொழும்பில் ஒரு மாநாட்டில் உரையாற்றும்போதே இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

“இலங்கையில் இன்று உலகிலேயே அதிகவிஷம் உணவில் உள்ளது. எம்.பி.க்கள் உட்பட அமைச்சர்கள் இங்கு இருப்பதால் நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன். 2010 முதல் எங்கள் கோரிக்கை இந்த நாட்டை விஷமாக மாற்றக்கூடாது. பாராளுமன்றம் உங்கள் கைகளில் உள்ளது. விஷத்தை நிறுத்துங்கள்.  ஒரு நாட்டில் உணவு நச்சுத்தன்மையின் சராசரி தனிநபர் அளவு 7 அலகுகள். நாங்கள் 280 அலகுகளை நிறுத்தியுள்ளோம் என்றார்.