பரிந்துரைகளை விரைவுபடுத்துமாறு பேராயர் வேண்டுகோள்.

ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை விரைவுபடுத்துமாறு கோரி பேராயர் மல்கம் கார்டினல் ரஞ்சித்  ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷவுக்கு சிறப்பு கடிதமொன்றினை அனுப்பியுள்ளார்.

ஏப்ரல் 21, 2019 தொடர் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கை இந்த மாதம் 1 ஆம் தேதி ஆணைக்குழு உறுப்பினர்களால் ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த சுதந்திர தின கொண்டாட்டாத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, இறுதி அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை செயல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

தனது கடிதத்தில், ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் குறித்து தனக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்றும் இறுதி அறிக்கையின் நகலை தனக்கு வழங்க வேண்டும் என்றும் கார்டினல் கேட்டுக்கொண்டார்.