40நாட்களின் பின்னர் காத்தான்குடி நகரில் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்ட 10 கிராம சேவகர்பிரிவுகளில்  இன்று  வர்த்தக நிலையங்கள் திறப்பு

ரீ.எல்.ஜவ்பர்கான்–

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் 31ம் திகதிமுதல் மூடப்பட்டிருந்த காத்தான்குடி நகரின் 10 கிராம சேவகர் பிரிவுகளிலும்  வர்த்தக நிலையங்கள் இன்று காலை முதல் திறக்கப்பட்டிருந்தன.

கடந்த டிசம்பர் மாதம்  31 ம் திகதி முதல் கொரோனா பரவல் அதிகரிப்பை அடுத்து காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவின் 18 கிராம சேவகர் பிரிவுகளும்  தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தது..
தொடரான அன்டிஜன் பரிசோதனைகளை அடுத்து குறித்த பிரதேசத்தின் 8 கிராம சேவையளர் பிரிவுகளில் ஏற்கனவே தனிமைப்படுத்தல் சட்டம் நீக்கப்பட்டது.

தொடர்ந்தும் கடந்த40 நாட்களாக 10 கிராம சேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் சட்டம் அமுலில் இருந்தது.இன்று9ம் திகதி  முதல் 4 வீதிகளைத்தவிர 10 கிராமவேசகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவதாக மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் அறிவித்ததையடுத்து  இன்று காலைமுதல் வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தததுடன் பாடசாலைகள் பள்ளிவாயல்கள் என்பனவும்திறக்கப்பட்டன.இத்துடன் வழமையான அலுவல்கள் இடமபெற்று வருகின்றன.

இதேவேளை

மட்டக்களப்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் சில பிரதேசங்கள் இன்று காலை 06.00 மணி முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில்,

162 ஏ காத்தான்குடி 06 தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு,
162 பீ காத்தான்குடி 06 மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு,
164 காத்தான்குடி 04 கிராம உத்தியோகத்தர் பிரிவு,
164 பீ காத்தான்குடி 05 வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு,
164 ஏ காத்தான்குடி 05 கிராம உத்தியோகத்தர் பிரிவு,
164 சீ காத்தான்குடி 04 மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு,
167 காத்தான்குடி 01 கிராம உத்தியோகத்தர் பிரிவு,
167 சீ புதிய காத்தான்குடி தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு,
167 டீ காத்தான்குடி மேல் கிராம உத்தியோகத்தர் பிரிவு,
167 ஈ காத்தான்குடி மத்திய கிராம உத்தியோகத்தர் பிரிவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.