மட்டக்களப்பு மாவட்டத்தில் வேல்ட் விசன் சர்வதேச தொண்டு நிறுவனத்தினால் இவ்வாண்டு மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் ஆராய்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் 
மட்டக்களப்பு மாவட்டத்தில் வேல்ட் விசன் சர்வதேச தொண்டு நிறுவனத்தினால் இவ்வாண்டில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாக ஆராயும் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தலைமையில் இன்று (09) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

சிறுவர் அபிவிருத்தி செயற்பாடுகளில் அதிகமான திட்டங்களை இம்மாவட்டத்தில் முன்னெடுத்துவரும் வேல்ட் விசன் நிறுவனம் வாகரை, கோரளைப்பற்று, செங்கலடி மற்றும் பட்டிப்பளை போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளில் அத்திட்டங்களை அமுல்ப்படுத்தி வருகின்றது.
இதனடிப்படையில் இவ்வாண்டு மேற்கொள்ளவிருக்கும் திட்டங்கள் தொடர்பாக அரசாங்க அதிபர் உட்பட அதிகாரிகளுக்கு நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
இதன்போது இப்பிரதேசங்களில் சிறுவர் பாதுகாப்பு, சிறுவர்களது கல்வி, ஊட்டச்சத்து குறைபாடு, சுகாதாரம், பாடசாலை இடைவிலகல் போன்ற விடயங்களை நிவர்த்திப்பதற்கான திட்டங்களும், வாழ்வாதாரம் குண்றிய குடும்பங்களுக்கான திட்டங்கள், பாடசாலை மற்றும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் போன்ற திட்டங்களும் இவ்வாண்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தாகவும் தெழிவு படுத்தப்பட்டது.
இதன்போது மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி உட்பட பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பளர்கள், பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி, மாவட்ட சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் விவசாய விரிவாக்கல் பிரதிப் பணிப்பாளர், வேல்ட் விசன் நிறுவன நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர்கள் உட்பட அரச அதிகாரிகள் பலசும் பிரசன்னமாயிருந்தனர்.
கடந்த 2004 ஆம் ஆண்டிலிருந்து இம்மாவட்டத்தில் செயற்பட்டுவரும் வேல்ட்விசன் நிறுவனம் தனது பணிகளை இவ்வாண்டுடன் நிறைவு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.