கோடைமேடு நவசக்தி வித்தியாலய மாணவர்களுக்கு உதவி.

எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின்  ஏற்பாட்டில் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கோடைமேடு நவசக்தி வித்தியாலயத்தில் இவ்வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு விஷேட பயிற்சி நூல்களும் முகக் கவசங்களும் வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
எருவிலைச்சேர்ந்த சமூகசேவகர் அ.வசிகரன் அவர்களது நிதி உதவிமூலம் இவ் உதவித்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வலுவூட்டப்பட்ட பாடசாலை மேம்பாட்டுத்திட்ட இணைப்பாளர் திருமதி.ம.குருபரன், அவ் அமைப்பின் ஆலோசகர் கோடைமேடு கிராம அபிவிருத்திச்சங்கத் தலைவர் க.வியஜசுந்தரம்,அமைப்பின் செயலாளர் இ.ஜீவராஜ் மற்றும் அதிபர், ஆசிரியர்கள் அத்தோடு அவ் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.